திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி 'உணவே மருந்து' என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் கே. மாயகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் க. பூபாலன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, கிருஷ்ணகிரி உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சு. வெங்கடேசன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் அவர் பேசியதாவது: உணவு பாதுகாப்பு தினம் ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 07 ஆம் தேதி கொண்டாப்பட்டு வருகிறது. நாம் உண்ணும் உணவே மருந்து ஆகும்.
இதை மக்கள் யாரும் உணர்வதில்லை. இப்போது நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இயற்கையானவையா? என்று நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இல்லை சாப்பிடும் உணவில் முக்கால்வாசி உணவுப் பொருள்கள் அனைத்தும் செயற்கை வேதி சேர்மங்கள் சேர்க்கப்பட்டு செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு பயிர் விளைவிக்க ஏகப்பட்ட செயற்கை உரம் தேவைப்படுகிறது. அது செயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட காய்கறிகள் பழங்கள் தான் நாம் இப்பொழுது உட்கொள்கிறோம்.
இதைதான் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல மேடைகளில் இயற்கை வேளாண்மை முறையும் இயற்கை உணவு பொருள் முக்கியத்துவத்தை அருமையாக விளக்கி கூறிக்கொண்டு வருகிறார்.
இந்த நிலைமை இதுதான் மனிதன் இனிமேல் 40 வயதை கூட தாண்டுகளுக்கு கடினம் 30 வயதிற்குள் அனைவரும் மூட்டையை கட்டிக்கொண்டு பரலோகம் செல்ல வேண்டியது தான்.
ஆம்! இது வேடிக்கையான விஷயம் இல்லை. இப்பொழுது 20 வயது குழந்தைகளுக்கே சர்க்கரை வியாதி மாரடைப்பு, இதய நோய்கள், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வந்து பாதிப்படைகிறார்கள். பல குழந்தைகளை இறந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் சாப்பிடும் உணவுப் பொருள் நஞ்சாகிக் கொண்டு வருகிறது.
நாம் ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ண வேண்டும், மேலும் குர்குரே, பாஸ்ட் புட், பரோட்டா, சிக்கன் ரைஸ், எக் ரைஸ் போன்றவைகளை பெரும்பாலும் துரித உணவுகளையும் நொறுக்கு தீனிகளையும் வாங்கி உட்கொள்ள கூடாது. தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் வைட்டமின்கள் உள்ள உணவுப்பொருள்களை கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இது மிகவும் பாராட்டக்கூடிய செயலாகும்.ஏனென்றால் மாணவர்கள் மத்தியில் இயற்கை உணவு பொருள்களின் முக்கியத்துவம் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் பற்றிய விழிப்புணர்வு கொண்டு சென்றதால் தான்.
சமூக ஆர்வலர் பிரகாஷ், வருவாய்த்துறை மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ. ஷாகுல் அமீது நன்றி கூறினார்.
இந்த பதிவில் நாம் பார்த்த இயற்கை உணவு பொருள்களின் முக்கியத்துவத்தை நீங்களும் புரிந்துகொண்டு உங்களை உணவு முறையை மாற்றி அதை சுற்றி உள்ளவர்கள் உணவு முறையை மாற்றி அனைவரும் கூடி ஒன்றாக ஆரோக்கியமாக வாழ்ந்த முயற்சி எடுப்போம்.
மேலும் ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன். நன்றி வணக்கம்!